Author: நாமக்கல் சிபி
•3/15/2006 07:04:00 pm
இது வரை

இன்ஸ்பெக்டர் தேவசகாயம் புன்முறுவலுடன் கூறினார்.

"ரொம்ப தேங்க்ஸ் மிஸ்டர் சிவப்பிரகாஷ்! இது வரை வசந்தியோட கணவனுக்கு எதிரா எந்த ஆதாரமும் இல்லாலததால் வேற வழியில்லாம அந்தப் பொண்ணு இறந்தது ஒரு சமையலையில் நடந்த விப த்துதான்னு ஃபைலை குளோஸ் பண்ணினோம். நல்ல வேளையா அந்த பொண்ணே தன் கைப் பட எழுதின லெட்டர்ஸக் கொண்டு வந்தீங்க, இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் சட்டத்துல இருந்து தப்பிக்கக் கூடாது சார், எப்படியும் 4 வருஷம் உள்ள இருக்க வேண்டியிருக்க இருக்கும்னு நினைக்கறேன்"

"கண்டிப்பா சார், இந்த பாழாய்ப்போன வரதட்சணையால இன்னும் இதுபோல எத்தனை குடும்பங்கள் பாதிக்கப் பட்டிருக்கோ, உங்களுக்குதான் முக்கியமா நன்றி சொல்லணும், முடிஞ்சி போன கேஸா இருந்தாலும் மறுக்காம புகாரை ஏற்று எல்லாரையும் மறுபடி விசாரணை செஞ்சி துரிதமா நடவடிக்கை எடுத்திருக்கீங்க"

"அப்படியில்லை சார், எங்களுக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் அடிப்படையான ஆதாரங்கள் எதுவும் அப்போ கிடைக்கலே! எனிவே தாங்க் யூ மிஸ்டர் சிவப்பிரகாஷ், தங்க் யூ மிஸ்டர் சக்தி, கிளம்பறேன்"

சிவப்பிரகாஷைப் பார்த்தான் சக்தி. ஏதோ ஒரு நிம்மதி தெரிந்தது அவன் முகத்தில்.

"அப்புறம் என்ன! நீ எப்போ வெளியூர் கிளம்பப் போறே?"

"நல்லா சொல்லுங்க சக்தி, திரும்பவும் பேனாவும் பேப்பருமா எங்கியாவது உட்கார்ந்திகிட்டிருக்கப் போறாரு" தன் மகனுக்கு சாப்பாடு ஊட்டியவாறே வெளியில் வந்தாள் தாரா.

"தாரா, சக்தி... நானும் யோசிச்சேன்.. பையனையும் அடுத்த வருஷம் ஸ்கூல்ல சேர்க்கப் போறோம், அதனால இப்பவே ஒரு 15 நாள் அந்தமான் போகலாம்னு முடிவு பண்ணிட்டேன். நான் நேத்தே டிக்கெட்ஸ் எடுத்துட்டேன்."

சக்தி இருப்பதைக் கூட பொருட்படுத்தாமல் தன் மகன் அஷோக்குடன் சேர்ந்து கொண்டு "ஐய்யா.. அந்தமான் போகப் போறோம்.." என்று உற்சாகமானாள் தாரா.

சக்தியும் தனது வீட்டிற்குக் கிளம்பினான். நன்கு காய்ச்சிய பசும்பாலை குறைந்த அளவு சர்க்கரை சேர்த்து ஒரு டம்ளரில் ஊற்றிக்கொண்டு சிவாவின் மேசைக்கருகில் வந்தாள் தாரா.

"என்னங்க, என்ன பண்ணுறீங்க இப்போ? டாக்டர் அங்கிள்தான் ரெஸ்ட் எடுக்கச் சொன்னாருல்ல?"

அவளை அன்பாக நோக்கிய சிவா
"இப்போ கதை எழுதல டியர், அந்தமான்ல என்னோட வாசகர்கள் சில பேரு இருக்காங்க, அவங்களை சந்திக்கறதுக்காக அவங்க முகவரியெல்லாம் எடுத்து வெச்சிகிட்டிருக்கேன்...."

"ஐயோடா... வேதாளம் மறுபடி முருங்கை மரம் ஏறியாச்சா? எப்படியோ போங்க சாமி" என்றவாறு டம்ளரை மேசை மீது வைத்து விட்டு நகர்ந்தாள்.

-: முற்றும் :-
டிஸ்கி : கதையில் இடம்பெற்ற கதாபாத்திரங்களின் பெயர்கள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே.

சிறு கதையாய் ஆரம்பித்து ஒரு தொடர் கதையாய் முடித்திருக்கிறேன். எனக்கு இது ஓர் நல்ல அனுபவமே .விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த 13 பகுதிகளையும் தொடர்ந்து படித்த (ஓரிரு!?) வாசக உள்ளங்களுக்கும், பொறுமையிழந்து (கடுப்பாகித்தான்) பாதியில் விட்ட வாசக அன்பர்களுக்கும் திகில் கதையோ என நினைத்து திரும்பிப் பார்க்காமல் ஓடிய அனைவருக்கும் என் நன்றி.

முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே



Post a Comment
This entry was posted on 3/15/2006 07:04:00 pm and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 விமர்சனங்கள்:

On 16 December 2011 at 02:59 , vinu said...

i read just now quite interesting narration!

Thanks for the good time!

keep rocking!!!!

 
On 16 January 2012 at 00:59 , தினேஷ்குமார் said...

13 பதிவுகளையும் படித்தேன் சுவரஷ்யமான கதை....

 

பதிப்புரிமை

© Copyrights Reserved to Namakkal Shibi, the author of this blog, the contents of this blog shall not be reproduced in any form of media without the knowledge or prior permission of the author.

© இவ்வலைப்பூவின் படைப்புகள் மற்றும் அவற்றின் பதிப்புரிமை யாவும் இவ்வலைப்பூவின் ஆசிரியர் நாமக்கல் சிபியை மட்டுமே சாரும்! ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவரும் இவ்வலைப்பூவின் பக்கங்களை/படைப்புகளை ஊடகத்தின் எவ்வித உருவிலும் மறுபதிப்பு செய்யலாகாது!