Author: நாமக்கல் சிபி
•10/21/2007 10:12:00 am
பகுதி 7


சலவை செய்யப்பட்ட வெள்ளை வேட்டி சட்டையுடன் சோஃபாவில் வாட்ட சாட்டமாய் அமர்ந்திருந்தார் எம்.எல்.ஏ தென்னரசு. 40 வயதைக் கடந்திருந்தாலும் இளமையான தோற்றத்திலும் சுறுசுறுப்பிலும் 35 ஐத் தாண்டியிருக்க மாட்டார் என்றே நம்பத் தோன்றும். பின்புறம் பவ்யமாய் பி.ஏ கையில் கோப்புகளுடன் நின்றிருக்க எதிரில் இருப்பவர்களை ஏறிட்டார்."சொல்லுங்க மாணிக்கம் இன்னும் என்னதான் பிரச்சினை அந்த இடத்திலே?"


"ஐயா! பார்ட்டி கிரயம் பண்ணுறதுலே எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனா அங்க குடி இருக்கிற காலணி ஆளுங்கதான் காலி பண்ண மாட்டோம்னு பிரச்சினை பண்ணுறாங்க போல"


"எல்லாரும் அப்படித்தானா, இல்லை முன்னாடி ரெண்டு மூணு பேரு விறைச்சிகிட்டு நிக்க மீதியெல்லாம் அவங்க சொல் படி முரண்டு பண்ணுறாங்களா?"


"ஆமாங்க, இதுலே ஒரே ஒரு ஆள்தான் எல்லாரையும் தூண்டி விட்டுகிட்டு இருக்காரு. பேரு செல்லத் துரை, சிட்டி டிரான்ஸ்போர்ட்ஸ்லே மேனேஜர் போல, யூனியன்லயும் செல்வாக்கான ஆளாம்"


"ஓஹோ! அதான் துள்ளுறானா? இன்னும் ஒரு தபா பேசிப் பாருங்க! அப்பவும் மசியலைன்னா சொல்லுங்க! பிரச்சினையை முடிச்சிடலாம்!"


சொல்லிக் கொண்டிருக்கும்போதே செல் போன் ஒலித்தது.


"ஹலோ! சொல்லுடா!'


".............."


" அப்படியா! சரி! உடனே வண்டி அனுப்புறேன்! நீ அங்கேயே இருடா!"


"................"


"ஓகே!"


தனது பி.ஏ. விடம் திரும்பினார்.


"யோவ்! என்னய்யா வண்டிய மெயிண்டெயின் பண்னுறீங்க? காலேஜ் போறதுக்குள்ளே பிரேக் டவுன் ஆகி நின்னிருக்குது!

உடனே வேற வண்டிய அனுப்பு! போ!"


பி.ஏ பதை பதைத்து ஓடினான்.பத்து நிமிடங்களு மேல் ஆகியும் பொறுமை இழந்த நந்தினி மீண்டும் தனது செல் ஃபோனை எடுத்தாள்."அண்ணே! எனக்கு டைம் ஆகுது! நான் ஆட்டோ பிடிச்சி பொயிக்கிறேன்""ஐயோ! வேண்டாம்டா! வண்டி இப்ப வந்துடும்! கொஞ்சம் வெயிட் பண்ணுடா!""போங்க அண்ணே! ஃபோன் பண்ணி 10 நிமிசம் ஆச்சு! இன்னும் கார் வரக் காணோம்!""அட! பேசிகிட்டிருக்கிற நேரம் வந்துடும்டா! காலேஜ் போய்ச் சேர்ந்ததுன் எனக்கு ஒரு ஃபோன் போட்டுடு! சரியா?""ச்சே!" என்றவாறு செல் ஃபோனைத் துண்டித்து கைப் பையில் வைத்தாள்!அப்போது மெதுவாக அவளைக் கடந்து சென்ற மோட்டர் சைக்கிளில் பயணித்தவனை சட்டென அடையளம் கொண்ட நந்தினி முகம் மலர்ந்தாள்.சற்று குரலை உயர்த்தி"ஹாய் சக்தி!" என்று அழைக்கவண்டியின் வேகம் முழுமையாய்க் குறைந்து நின்றது!திரும்பி வந்த சக்தி இவளைப் பார்த்ததும் புன்னகைத்தான்!"ஹாய் நந்தினி! என்ன இந்த இடத்துலே வெயிட்டிங்?""போ சக்தி! ககர் பிரேக் டவுன் ஆயிடுச்சு! அண்ணன் வேற கார் அனுப்பி இருக்கார்! அதுக்குத்தான் வெயிட்டிங்க்!"என்று சலித்துக் கொண்டே சொன்னவள், சட்டென முகத்தில் பிரகாசம் காட்டினாள்."சக்தி! நீயும் காலெஜ்க்குத்தானே போறே? நான் உன் கூடவே பைக்ல வந்துடறேனே!""என்னாது! என் கூடவா? அம்மா தாயே! நீங்க உங்க வண்டியிலயே மெதுவா வாங்க! நான் கெளம்புறேன்! ஆளை விடு!" என்றான்."என்ன சக்தி இது! அஸ் அ பிரண்ட்! இந்த ஹெல்ப் கூட செய்யக் கூடாதா? இல்லாட்டி என்னைக் கூட்டிகிட்டு போக பயமா?""என்னாது பயமா? எனக்கா? வந்து உக்காருங்க சீட்லே!" என்றான்.நந்தினி தனது கூந்தலை பின்புறம் ஒதுக்கிவிட்டுக் கொண்டே அவனது வண்டியில் ஏறி அமர்ந்தாள்."மணி அந்த டிரைவர் வந்தவுடன் நேரா காலெஜ்க்கு வரச்சொல்லிடுங்க" என்று கூறிவிட்டு,"ம் புறப்படலாம் சக்தி" என்றாள்.விபரீதத்தை விலை கொடுத்து வாங்கி இருப்பதை அறியாமல் வண்டியை உதைத்துக் கிளப்பினான். அவளது மனமோ உற்சாகத்தில் "ஊ ல லால்லா" என்று பாடியது!வண்டியின் வேகத்தில் பின்னலிடப் படாத அவளது கேசம் காற்றில் அலையாய்ப் பறந்தது."சக்தி! கொஞ்சம் மெதுவாப் போயேன்! விழுந்துடுவெனோன்னு பயமா இருக்கு" என்று கூறிக் கொண்டே அவனது வலது தோளை அழுந்தப் பற்றிக் கொண்டாள்.காலத்தின் குரல்

இறந்த காலம் : ஐயோ! இவன் பழசை மறந்துட்டானா என்ன? தைரியத்தைப் பத்தி பேசினதும் டக்குன்னு கூட்டிகிட்டு கெளம்பிட்டானே!நிகழ் காலம் : மச்சி! டவுன்லே இதெல்லாம் சகஜம்டா! வண்டியிலதான கூட்டிகிட்டுப் போறான்! வாழ்க்கைலயா கூட்டிகிட்டுப் போறான்?எதிர் காலம் : பஞ்சும் நெருப்பும் இப்பத்தான பக்கத்துலெ வெச்சிருக்கென்! போகப் போகப் பாருங்க!தொடரும்.............................!
Post a Comment
This entry was posted on 10/21/2007 10:12:00 am and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 விமர்சனங்கள்:

பதிப்புரிமை

© Copyrights Reserved to Namakkal Shibi, the author of this blog, the contents of this blog shall not be reproduced in any form of media without the knowledge or prior permission of the author.

© இவ்வலைப்பூவின் படைப்புகள் மற்றும் அவற்றின் பதிப்புரிமை யாவும் இவ்வலைப்பூவின் ஆசிரியர் நாமக்கல் சிபியை மட்டுமே சாரும்! ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவரும் இவ்வலைப்பூவின் பக்கங்களை/படைப்புகளை ஊடகத்தின் எவ்வித உருவிலும் மறுபதிப்பு செய்யலாகாது!