Author: நாமக்கல் சிபி
•3/03/2009 09:24:00 am
முதல் நாள் கல்லூரிக்குள் நுழைந்தபோது முதலில் கண்ணில் தென்பட்டவள் அவள்தான் அன்பரசி! அழகான ராட்சசி, தேவதை, நடமாடும் தென்றல் என்றெல்லாம் வர்ணிக்கும் அளவுக்கு சொல்லிக்கொள்ளும்படியான ஃபிகர் எல்லாம் இல்லை! கல்லூரி மாணவர்களுக்கே உரிய பாஷையில் சொல்ல வேண்டுமெனில் அட்டு ஃபிகர்! அதைச் சொன்னதற்குக் கூட புதுசாய்ச் சேர்ந்த கூட்டாளி தினேஷ் என்னைக் கிண்டலடித்தான்! அப்பக் கூட இதை ஃபிகர் என்று சொன்ன முதல் ஆள் நான் தான் என்று!

லைப்ரரி எங்கே இருக்கு என்று கேட்டபோது அளவான புன்னகையுடன் கைகாட்டினாள். "அதோ அந்தப் பக்கம்"

பின்னர் நாட்கள் சென்றுகொண்டிருந்தன! அவ்வப்போது தலை நிமிர்ந்து பார்த்தால் சிறு புன்னகை! அவ்வளவே! யாருடனும் எளிதில் சிரித்துப் பேச மாட்டாள்! நண்பர்களுக்குள் பேசிக் கொள்வார்கள்! "டேய் அவளா பேசணும்னு எதிர்பார்க்கிறே! அவ ஒரு விடியா மூஞ்சிடா"

அவளுக்கும் ஒருவன் காதல் கடிதம் நீட்ட அதை வாங்கிய அவள் மிகவும் பொறுப்பாக மெனக்கெட்டு எழுதி முடித்த அசைண்மெண்டைப் போல் விடுதி வார்டனிடம் சமார்த்தாகக் கொண்டு போய் சமர்ப்பித்தாள்! அவன் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தார்களோ இல்லையோ எங்களின் கிண்டல்களால் வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்தான்!

"மச்சி! நீ வார்டனுக்கு லவ் லெட்டர் எழுதியிருந்தேன்னா கூட பெருமைப் பட்டிருப்பேண்டா! கரெக்டான ஆள் மூலமா கொடுத்தனுப்பிட்டியேன்னு உன் புத்திசாலித்தனத்தை வரலாற்று புத்தகத்துல எழுதி வெச்சிருபோம்! போயும் போயும் இவளுக்கு லெட்டர் எழுதி எங்க மானத்தையும் வாங்கிட்டியேடா"

இப்படியே ஆளுக்கு ஆள் அவளை ஓட்டிக் கொண்டிருந்தாலும் நாட்கள் செல்லச் செல்ல அவளும் கொஞ்சம் கொஞ்சமாய் மெருகேறிக் கொண்டே வந்ததுபோலிருந்தது எனக்கு!

எங்களுடன் நன்றாகப் பழகிய சில மாணவிகள் கூட அவளிடம் கொஞ்சம் டிஸ்டண்ட் வெச்சிக்கோ என்றே கூறியிருந்தார்கள்! ஆனாலும் ராஜி மட்டும் கொஞ்சம் குளோசாக அவளுடன் பழகிக் கொண்டிருந்தாள்! அருகருகேதான் அமர்வார்கள்!

"ஹே ராஜி! எங்க இன்னிக்கு உன் ஃபிரண்டு காணோம்?"

"ஏன் உதை வேணுமா உனக்கு? அவளைப் பார்க்காம இருக்க முடியலையா? எல்லாம் திமிரு"

கம்ப்யூட்டர் லேபில் டாஸ் மெசேஜ் மூலமாக ஒரு நாள் செய்தி அனுப்பினேன்!
"ஹாய்! ஹவ் ஆர் யூ?"
கம்ப்யூட்டரில் ஐபி மட்டுமே தெரியும் என்பதால் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தாள்! பின்னர் அமைதியாக அமர்ந்து கொண்டாள்!

நான் ராஜியை அழைத்தேன்!
"ராஜி! ஹாய் ஹவ் ஆர் யூன்னு ஒரு மெசேஜ் அனுப்பினேன் கோவிச்சிக்க மாட்டேளே!"

"நீ எவ்ளோ தடவை சொன்னாலும் அடங்க மாட்டே! அவளோட அப்பாவை கூட்டிட்டு வரப் போறா! உதை வாங்கித்தான் அமைதியாவே நீயி!" சன்னமான குரலில் எச்சரித்தாள் ராஜி!

"ஐயயோ! அப்போ அவகிட்டே நான்தான் அனுப்பினேன்னு சொல்லிடு! அப்படியே ஸாரி சொன்னேன்னும் சொல்லிடு"

தலையாலடித்துக் கொண்டு எழுந்து அவளருகே சென்றாள்.

சிறிது நேரத்தில் எனக்கும் மெசேஜ் வந்தது!

"ஃபைன், நோ நீட் ஆஃப் ஸாரீஸ்"

"அட" என்று வியந்து கொண்டேன்! எழுந்து நின்று பார்த்தேன்! புன்னகைத்தாள்!

இப்பொழுதெல்லாம் ராஜியுடன் இருக்கும் நேரங்களில் என்னுடனும் அவ்வப்போது சிரித்துப் பேசுகிறாள்! அவ்வப்போது என் மனசுக்குள் வந்து சென்றது! ஆரம்பத்தில் நான் செய்த வர்ணனை " அட்டு ஃபிகரு"


எலக்ட்ரானிக்ஸ் லேபில் என் பேட்சில் இரண்டு பெண்கள் இருந்ததாலும், அன்பரசியின் பேட்சில் அவள் மட்டுமே பெண் என்பதாலும் லெக்சரரிடம் கேட்டு எனது பேட்சிற்கே மாறிக்கொண்டாள்!

அன்று எங்கள் லதா மேடம் ஒரு சர்க்யூட் பற்றி எங்கள் பேட்சிற்கு விளக்கம் அளித்துக் கொண்டிருக்க

நாங்களிருவரும் சற்றுத் தள்ளி பேசிக் கொண்டிருந்தோம்!

"தண்ணி அடிச்சா மயக்கமா வருமா? எப்படி இருக்கும்" இது அவள்

"ஆமா! அதாவது அப்படியே பூமியிலேயே பறக்குற மாதிரி இருக்கும்! நம்ம வெயிட்டே நமக்குத் தெரியாது! ஒரு மாதிரி கிறக்கமா இருக்கும்!"

"எதுக்காக அதுலே கூல்ட்ரிங்க்ஸ் கலந்துக்குறாங்க! அப்படியே குடிச்சா என்ன ஆகும்?"

"அப்படியேவும் சில பேரும் குடிப்பாங்க! ஆனா ஆல்கஹால் ஸ்ட்ராங்கா இருக்கும்! வயிறு எரியும்! கெமிஸ்ட்ரி லேப்லே ஆசிட்லே தண்ணி கலந்தா எஃபெக்ட் குறையுமல்ல அது மாதிரி"

அவள் விழிகள் வியப்பில் விரிந்தன! எனக்கு அப்போதும் கூட ஏனோ அவள் அழகாகத் தெரிந்தாள்!

அதற்குள் எங்கள் மேடம் நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை கவனித்து விட

"இதுக்குத்தான் அந்த பேட்சிலேர்ந்து இந்த பேட்சுக்கு மாறி வந்தியா?...." என்று திட்ட ஆரம்பிக்க தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்!

"ஹேய் ஹே! எதுக்கு இப்ப அழறே நீ! என்னைக் கூடத்தான் திட்டினாங்க! என்னைப் பாரு! நான் அழுதனா?"

ராஜி முறைத்துக் கொண்டிருந்தாள்!

"இங்க பாருப்பா! பேசினோம்னு மட்டும் தெரிஞ்சிதான் திட்டினாங்க! இன்னும் என்ன பேசினோம்னு தெரிஞ்சிருந்தா என்ன நடந்திருக்கும்னு நினைச்சிப்பாரு"
என்று சமாதானப் படுத்தினேன்!

"இனிமெ மேடம் திட்டினதுக்கெல்லாம் அழக் கூடாது! அமைதியா தலையை குனிஞ்சி நின்னுகிட்டிருந்தா போதும்! வாய் வலிக்க ஆரம்பிச்சதும் அவங்களா நிறுத்திடுவாங்க! என்ன" என்றபோது க்ளுக் என்று சிரித்தாள்!

அன்று மதிய உணவு வேளையில்
"நான் கொண்டு வர சாப்பாடெல்லாம் சாப்பிட மாட்டீங்களா" என்றாள்.

"ஏன் சாப்பிடாம! கொடுத்தா சாப்பிடுவோம்!" என்றேன்!

"சரி கையை நீட்டுங்க"

ஒரு கை சாதம் எடுத்து என் கையில் வைதுக் கொண்டே கேட்டாள்! ராஜி உங்களை அண்ணான்னு சொல்லுறா? நானும் உங்களை அண்ணான்னு சொல்லாமா?

"ஹக்!" சோறு தொண்டையிலேயே சிக்கி நின்று கொண்டது!
ராஜி தண்ணீரை எடுத்துக் கொடுத்தாள்!

"அம்மா தாயே! ஒரு தங்கச்சியை வெச்சிகிட்டே நான் படுற பாட்டை சொல்லி மாளாது! நீ வேற வேணாம் தாயே!" சிரித்துக் கொண்டே சொல்லி மழுப்பினேன்!

ராஜி என்னை பாவமாகப் பார்த்தாள்! நான் சட்டென அங்கிருந்து நகர்ந்து கொண்டேன்!

சங்கமம் - போட்டிக்காக : தலைப்பு "கல்லூரி"
Post a Comment
This entry was posted on 3/03/2009 09:24:00 am and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

22 விமர்சனங்கள்:

On 3 March 2009 at 10:21 , Ungalranga said...

சூப்பர்....
நல்ல நேரேஷன்...
மேலும் தொடரவும்...
வாழ்த்துக்கள்..
மீ த பர்ஸ்ட்...

 
On 3 March 2009 at 10:56 , Thekkikattan|தெகா said...

அதெப்படிப்பா... அப்படியே ஞாபகம் வைச்சு எழுதுறீங்க டீடெய்ல்லாஆஆஆ ;-)? எங்கே இருக்கு அந்த அட்டு இப்போ :-P

 
On 3 March 2009 at 10:59 , வெட்டிப்பயல் said...

Thala,
Super...

All the best...


But poatiku oru kathai thaan anupanum. athanala ithai vida oru nalla kathai anupavum.

 
On 3 March 2009 at 11:03 , நாமக்கல் சிபி said...

வெட்டி,

சொந்தக் கதையா இருக்கனும்னு போட்டிருக்கே!
அதான் சொந்தக் கதையா போட்டுட்டேன்

 
On 3 March 2009 at 11:16 , குமரன் (Kumaran) said...

அட்டு பிகரோ அழகு பிகரோ அண்ணான்னு சொல்றது அவங்களுக்கு எவ்வளவு ஈசியா இருக்குல்ல? :-(

 
On 3 March 2009 at 11:16 , ILA (a) இளா said...

சொந்தக் கதைன்னு யாரு சொன்னாங்க. புனைவுன்னுதானே சொல்லியிருக்கு?

 
On 3 March 2009 at 11:18 , நாமக்கல் சிபி said...

சொந்த கதைன்னா - சொந்தமா எழுதின கதைன்னு பொருள்!

 
On 3 March 2009 at 11:19 , நாமக்கல் சிபி said...

ஆமாம் குமரன்!

ஈஸியா அண்ணான்னு சொல்லிடுறாங்க! நம்ம ஃபீலிங்க்ஸ் புரிய மாட்டேங்குது!

 
On 3 March 2009 at 11:22 , வெட்டிப்பயல் said...

thaLA,
ungakita naanga innum ethirpaakiroam :)

 
On 3 March 2009 at 11:42 , நாமக்கல் சிபி said...

வெட்டி,

இன்னும் எத்தனை ஃபிகர்களைப் பத்தி எழுதணும்?

 
On 3 March 2009 at 18:59 , Anonymous said...

ஆகா........

 
On 3 March 2009 at 19:11 , Anonymous said...

இப்படி போயிடிச்சா உங்க நிலமை!!!

 
On 3 March 2009 at 19:15 , ILA (a) இளா said...

பின்னூட்டத்தை காப்பி-பேஸ்ட் பண்ண முடியலைங்க. டெம்பிளேட்ட பாருங்க

 
On 3 March 2009 at 19:21 , நாமக்கல் சிபி said...

இளா,

எதையுமே காப்பி பேஸ்ட் பண்ண முடியாது! ரெஸ்ட்ரிக்ட் பண்ணி இருக்கு!

 
On 3 March 2009 at 19:24 , கோவி.கண்ணன் said...

சூப்பர் சிறுகதை, கடைசி வரை விறுவிறுப்பு.

 
On 6 March 2009 at 15:16 , cheena (சீனா) said...

நல்லாவே இருக்கு சிபி - அண்ணான்னு சொல்லி தொண்டைலே சிக்க வச்சிட்டாளே ! பாவம் சிபி நீ அந்தக் காலத்துலே ! கல்லூரிக் காதல் - தண்ணி அடிக்கறதப் பத்திப் பேசுன அண்ணன் தங்கை நீங்களாத்தான் இருக்கும்........

 
On 14 March 2009 at 07:39 , Lancelot said...

Youngistan Kartik & One of a Kind Lancelot anbudan alaikirom...

http://lancelot-kartik.blogspot.com/

 
On 25 March 2009 at 19:23 , SUREஷ்(பழனியிலிருந்து) said...

வாழ்க.. நல்ல அனுபவம்தான்

 
On 31 March 2009 at 03:43 , விக்னேஷ்வரி said...

நல்லா இருக்கு. கல்லூரி அனுபவங்கள் எப்போது நினைத்தாலும் இனிமை தான்.

 
On 3 April 2009 at 04:20 , Venkatesh Kumaravel said...

உங்களது சங்கமம் போட்டி கதை குறித்த எனது எளிய கருத்துக்களை இங்கே உரைத்திருக்கிறேன். ஒரு முறை வாசித்து பாருங்களேன்.
http://paathasaari.blogspot.com/2009/04/blog-post_01.html

 
On 10 April 2009 at 08:41 , MyFriend said...

எல்லாருக்கும் நீங்க அண்ணா தானேண்ணா. :-)

 
On 12 April 2009 at 09:28 , நாணல் said...

:) neenga tamizh naatu annana sollave illai... :)

 

பதிப்புரிமை

© Copyrights Reserved to Namakkal Shibi, the author of this blog, the contents of this blog shall not be reproduced in any form of media without the knowledge or prior permission of the author.

© இவ்வலைப்பூவின் படைப்புகள் மற்றும் அவற்றின் பதிப்புரிமை யாவும் இவ்வலைப்பூவின் ஆசிரியர் நாமக்கல் சிபியை மட்டுமே சாரும்! ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவரும் இவ்வலைப்பூவின் பக்கங்களை/படைப்புகளை ஊடகத்தின் எவ்வித உருவிலும் மறுபதிப்பு செய்யலாகாது!