Author: நாமக்கல் சிபி
•6/27/2009 12:45:00 pm
என் பாதை எதுவாகவிருக்கும் என்று அவள் அப்போது அறிந்திருக்கவில்லை! இருப்பினும் அவள் என்னைப் பின்தொடர முயற்சிக்கக் கூடுமெனெ எண்ணியிருந்தேன்! எவரேனும் என்னைப் பின்தொடர்வதை ஒருபோதும் நான் விரும்பியதுமில்லை. அனுமதித்ததுமில்லை!

கடந்த காலங்கள் எல்லாவற்றிலும் என் முடிவுப்படியே அனைத்தும் நடந்துகொண்டிருந்தன! இதோ கடந்து சென்ற கடைசி நொடிப் பொழுதுவரை அப்படியேதான்! இந்த நொடியிலிருந்து என்னுள் என்னையும் அறியாமல் அப்படியொரு ஐயம் தோன்ன்றியிருக்கிறது! ஏன் எதனால் என்றெல்லாம் என்னால் அறுதியிட்டுக் கூறிவிடமுடியவில்லை! ஆயினும் என் உள்மனது சொல்லிக் கொண்டிருந்தது! என்னையும் மீறி என் அனுமதியின்றி நடந்துவிடுமோ என்ற உறுத்தல் எனக்குள்ளே இப்பொழுது எழுந்துவிட்டிருந்தது!

அதோ அந்த மலர்க்கொத்து அங்காடியில்தான் முதன்முதலில் அவளைச் சந்தித்திருந்தேன்!
நான் "ஹவ் மச்?" என்றபொழுது என் முகம் பார்த்துப் புன்னகைத்தாள்! "இருநூற்று ஐம்பது மட்டும்". மூன்று நூறு ரூபாய்களைக் கையிலெடுத்துக் கொடுத்தேன்! திருப்பிக் கொடுத்த ஐம்பது ரூபாயோடு மீண்டும் ஒரு புன்னகை! அவள் உதடுகள் உதிர்த்த நன்றி ஏனோ என் செவிகளுக்குள் செல்ல வில்லை போலும்!
"என்ன?" என்று ஏறிட்டு நோக்கினேன் அவளை! மீண்டும் அவள் உதடுகள் எதையோ உதிர்த்தன! சட்டென அங்கிருந்து நகர்ந்துகொண்டாள்!

அங்காடி வாயிலை அடைந்தபொழுது, அவள் என் கைகளில் இருந்தாள்! சிறிதும் கனக்கவில்லை! நான் ஏன் அவளை அள்ளி வந்தேன்? அட! அதற்குமல்லவா நன்றி சொல்கிறாள். நியாயமாக கோவித்துக் கொண்டல்லவா இருக்க வேண்டும்! திரும்பிப் பார்த்தேன்! இப்பொழுது அவள் அங்காடிக்குள்ளேயேதானிருந்தாள்! தன் சிநேகிதியிடம் எதையோ சொல்லிச் சிரித்துக் கொண்டிருக்கிறாள்! என்னைப் பற்றித்தானோ என்று நினைத்துக் கொண்டேன்!

சில நேரங்கள் எனக்குச் சிரிப்பாய்க் கூட இருந்தது! நானா இப்படி? எப்பொழுதும் அவள் முகத்தையே எண்ணிக் கொண்டிருக்கிறேன்! கல்லூரி நாட்களில் கூட எந்த ஒரு பெண்ணும் என்னுள் சிறு சலனத்தைக் கூட ஏற்படுத்தியிருக்கவில்லை! இப்பொழுது என்ன ஏற்பட்டது எனக்கு?

மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிட்டிவிடவில்லை எனக்கு! காரண காரியங்களை நாமேதான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற சிந்தனையின் விளைவினூடே மீண்டும் நானங்கு சென்றபோது அவள் வேலையிலிருந்து நின்றுவிட்டிருந்தாள்! எப்படியென்று தேடுவது! பெயர் கூடத் தெரியாதே எனக்கு!

பெருமூச்சொன்றை வெளியிட்டுக் கொண்டபோது மீண்டும் என் கண் முன் தோன்றினாள். அவளது சிநேகிதியின் சிறுகுறும்பு அவள் மீதான என் ஈர்ப்பை அவளிடம் புலப்படுத்தியிருக்கிறது போலும்! என் வருகையை அவளும் எதிர்நோக்கியே இருந்து வந்திருக்கிறாள்!

பூங்கொத்து எதுவும் வாங்காத பின்னும் கூட அவளின் புன்னகை எனக்குக் கிடைத்தது!
என்னுள் எத்தனையோ பூங்கொத்துக்கள் மழையாய் விழுந்தன! இப்படியே எங்கள் சந்திப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருந்தவண்ணம் இருந்தன! காரண காரியங்களும் தானாகவே அமைந்தன! சில என்னாலும், சில அவளாளும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டவையே என்று பிரிதொரு நாளில் நாங்களிருவரும் சொல்லிச் சிரித்துக் கொண்டோம்!

மழை நின்ற பின்னாலும் சில்லென்ற தூறல்கள் விழுந்தவண்ணம் இருந்த ஒரு மழை நாளின் மாலைப் பொழுதில் என் காதலைத் தெரியப் படுத்தினேன்! அவளிடமிருந்து எந்தவொரு ஆச்சரியமோ, ஆட்சேபணையோ எழவில்லை! அவளது மௌனம் அவளுடைய இசைவுக்கான வெளிப்பாடாகப் புரிந்து கொள்ள எனக்குப் போதுமானதாக இருந்தது!

என் மீதான அவளது உரிமை அதிகரித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் அவள் என்னைப் பின் தொடர்வது பொன்ற பிரம்மை எனக்குள் தோன்றலாயிற்று! எவரேனும் என்னைப் பின்தொடர்வதை ஒருபோதும் நான் விரும்பியதுமில்லை. அனுமதித்ததுமில்லை!

நாங்கள் மகிழ்ந்திருந்த கணங்கள் எல்லாம் துணுக்குற்ற சில நேரங்களில் அவளது வினாக்கள் என்னைச் சிதறடிக்க முயன்றிருந்தன! ஆயினும் நான் அவற்றை வெளிக்காட்டிக் கொண்டிராதிருந்தவனாயிருந்தேன்! என் அனுமதியையும் பெறாமலேயே என்னை ஆராயத் தொடங்கியிருக்கிறாள் என்றறிந்தபோது எனக்குள் அதிர்ச்சியும், அயற்சியும் ஏற்பட்டிருந்தன!

முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு அவள் என்னை ஆக்கிரமிக்கவும் தொடங்கியிருந்தாள்! என் சட்டைப் பையிலிருந்த சாக்லேட் காகிதங்களைக் கூட சந்தேகக் கண் கொண்டு என் கண்களை அவள் ஊடுறுவிப் பார்ப்பது எனக்குச் சலிப்பைத் தந்தது!

இப்பொழுதெல்லாம் எங்கள் சந்திப்புகள் அறவே நின்று போயிருந்தது! தொலைபேசிச் சிணுங்கள்களும் இருப்பதில்லை! என்னை அவளாகவே புறக்கணித்துக் கொண்டிருந்தாள்!
தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டு சென்றாள்! நியாயமான காரணங்கள் அமைந்த பொழுதும் கூட எங்கள் சந்திப்பு ஏனோ நிகழவேயில்லை! அன்றொரு நாள் அவள் பூங்கொத்து அங்காடியில் வேலையாயிருப்பாள் என்ற நம்பிக்கையில் வேறொரு இடத்தில், வேறொரு அங்காடியில் சுற்றிக் கொண்டிருந்த எங்களை எதிர்பாராத தருணத்தில் அவள் சந்தித்த பின்னர்.

இப்பொழுதெல்லாம் நான் வேறொரு மலரங்காடிக்குச் செல்வதை வாடிக்கையாக்கிக் கொண்டிருந்தேன்!
"ஹவ் மச்" என்றேன். "முன்னூற்று முப்பது" என்றாள் அவள்! கூடவே புன்னகையும்!


[உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது]
Post a Comment
This entry was posted on 6/27/2009 12:45:00 pm and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

36 விமர்சனங்கள்:

On 27 June 2009 at 21:12 , Anonymous said...

250 350 ஆன போதும் அவள் புன்னகையும் மாறவில்லை நீ பூரித்ததும் மாறவில்லை....

மலர்கொத்து அங்காடியில் மனங்கள் அலை பேசியது அருமை.....போட்டியில் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்...

 
On 27 June 2009 at 21:22 , வெண்பூ said...

எளக்கியவாதி நாமக்கல் சிபி.. வால்க.. வால்க...

 
On 27 June 2009 at 21:27 , சென்ஷி said...

:)

 
On 27 June 2009 at 21:29 , தருமி said...

இதுக்கு எப்ப நோட்ஸ் போடுவீங்க?

 
On 27 June 2009 at 21:39 , rangan said...

Nice Story..!!!

 
On 27 June 2009 at 21:53 , முரளிகுமார் பத்மநாபன் said...

கிளம்பிட்டாங்கையா... கிளம்பிட்டாங்கையா ......

அண்ணே! ஸுப்பரூ.

 
On 27 June 2009 at 21:53 , முரளிகுமார் பத்மநாபன் said...

கிளம்பிட்டாங்கையா... கிளம்பிட்டாங்கையா ......

அண்ணே! ஸுப்பரூ.

 
On 27 June 2009 at 22:13 , துபாய் ராஜா said...

நல்லாதான் இருக்கு கதை.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.அன்பு அதிகமானால் பிரிந்துபோகும் நெஞ்சு.

 
On 27 June 2009 at 22:14 , வெட்டிப்பயல் said...

தள,
வெற்றி பெற வாழ்த்துகள்!!!

 
On 27 June 2009 at 22:28 , தமிழ்நெஞ்சம் said...

great. Ending Punch is amazing

 
On 27 June 2009 at 22:31 , ☀நான் ஆதவன்☀ said...

அண்ணே உங்களூக்குள்ள இப்படி ஒரு எளக்கியவாதி இருப்பான்னு நான் நினைச்சு கூட பார்க்கல...

 
On 27 June 2009 at 22:36 , ☀நான் ஆதவன்☀ said...

போட்டியில் பரிசு பெற வாழ்த்துகள்

 
On 27 June 2009 at 22:38 , ஆயில்யன் said...

அண்ணே உங்களுக்குள்ள இப்படி ஒரு எளக்கிய வாதி வெறி புடிச்சு சுத்திக்கிட்டிருப்பான்னு நான் ”திங்க்” வே இல்லை :))

போட்டியில் வெற்றி வரிசையில் இடம் பெற வாழ்த்துக்கள் :)

சில வரிகளை மேற்கோள் காட்டலாம்ன்னு நினைச்சேன் பட் காப்பி பண்ணி பேஸ்ட் பண்ண முடியல :( ஈவன் ஒரு ரிப்பிட்டேய்ய்ய் கூட போட முடியல ஏன்...............?

 
On 27 June 2009 at 22:39 , நாமக்கல் சிபி said...

ஆயில்யன் காப்பி ரைட்பிரச்சினைக்காக காப்பி செய்வதை டிசேபிள் செஞ்சிருக்கேன்!

 
On 27 June 2009 at 23:19 , சந்தோஷ் = Santhosh said...

அண்ணே ஏண்ணே உங்களுக்குள்ள இப்படி ஒரு எளக்கியவாதியை மறைச்சி வெச்சி இருக்கிங்க.. எடுத்து வெளிய வுடுங்கண்ணே :)..அப்படியே ஒரு கோனார் நோட்சும் இதுக்கு போடுங்க சக்க போட்டு போடும்..

 
On 27 June 2009 at 23:22 , சந்தோஷ் = Santhosh said...

ஸ்ஸ்ஸஅப்பாஆஅ...துபாய் ராஜா முடியலை.. எப்படி இப்படியெல்லாம்..

 
On 27 June 2009 at 23:47 , நாமக்கல் சிபி said...

Santhosh!

ரொம்பவே ரசிச்சிருக்கீங்க போல துபாய் ராஜாவின் பின்னூட்டத்தை!
:)

 
On 28 June 2009 at 00:05 , நாமக்கல் சிபி said...

தமிழரசி, வெண்பூ, சென்ஷி

மிக்க நன்றி!

 
On 28 June 2009 at 01:52 , cheena (சீனா) said...

நல்லாருக்குய்யா - இருந்தாலும் அண்ணன் தருமி சொன்னதுக்கும்மதிப்புக் கொடுத்து அடுத்த இடுகை இட்டுடுங்க

 
On 28 June 2009 at 02:29 , உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

இதுக்கு மட்டும் பரிசு கொடுத்தாங்க..

நான் வலையுலகத்தில் இருந்து வாலண்டரி ரிட்டையர்ட்மெண்ட்டு வாங்கிட்டு ஓடிருவேன்..

போங்கய்யா நீங்களும் உங்க கதையும்..!

 
On 28 June 2009 at 03:19 , RAMYA said...

கதை அருமை. வெற்றிபெற வாழ்த்துக்கள்!

ம்ம்ம்ம் முன்னூற்றி முப்பது ரூபாவா :))
அது சரி

சரி மறுபடியும் வெற்றிபெற வாழ்த்திக்கறேன் சிபி.

 
On 28 June 2009 at 04:05 , நாமக்கல் சிபி said...

ஆண்டவா,

உண்மைத் தமிழன் அண்ணாச்சிக்காகவது எனக்கே பரிசு கிடைக்கணும்!

:)

 
On 28 June 2009 at 04:06 , நாமக்கல் சிபி said...

அவரோட லொள்ளு தாங்க முடியலை முருகா!

ஒரு ஹைக்கூ கவுஜை எழுதறேன் பேர்வழின்னு 300 பக்கத்துக்கு எழுதி கொண்டு வறாரு! நீதான் முருகா அவரைத் திருத்தணும்!

 
On 28 June 2009 at 16:41 , கவிதா | Kavitha said...

முருகா!! நீ வால்'லண்டரி ரிடையர் வாங்க இப்படி ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைச்சி இருக்கு...:)

சிபி..எப்படியாச்சும் இந்த பரிசை நீங்களே வென்ன்ன்ன்ன்று.. முருகன் ரிடையர் ஆக வழி செய்யுங்க.. :)

 
On 28 June 2009 at 21:37 , அனுஜன்யா said...

அழகிய மொழியில், சிறிய காதல் கதை. நல்லா வந்திருக்கு சிபி. ஆல் தி பெஸ்ட்.

ஆமாம், உங்க காரக்டரோட சம்பந்தமே இல்லாம, மென்காதல் கதை இலக்கியத் தமிழில்? கலக்குற மாநக்கல்.

அனுஜன்யா

 
On 28 June 2009 at 21:48 , நாமக்கல் சிபி said...

அனு ஜி,

மிக்க நன்றி!

(அதென்ன! என் கேரக்டரோட சம்மந்தம் இருக்குற மாதிரிதான் கதைகள் எழுதணுமா என்ன?)

//மென் காதல் கதை இலக்கியத் தமிழில்//
ஆஹா! ரொம்ப பெருமையா இருக்கு சகா!

 
On 28 June 2009 at 22:06 , Rajeswari said...

மென்மையான பூங்கொத்தாய் இந்த கதை...

வெற்றி பெற வாழ்த்துக்கள்

 
On 29 June 2009 at 04:28 , அதிஷா said...

ஆண்டாவா முருகா எப்படியாவது இந்த கதைக்கு பரிசு வாங்கி குடுத்திரு..

உ.த அண்ணன் பாவமில்லையா

 
On 29 June 2009 at 04:30 , அப்பன் முருகன் said...

ஆவண செய்கிறோம் பக்தர்களே..

 
On 29 June 2009 at 06:14 , Jeeves said...

//எளக்கியவாதி நாமக்கல் சிபி.. வால்க.. வால்க...//

மறுக்காச் சொல்லேய்
//
துபாய் ராஜா
said...

நல்லாதான் இருக்கு கதை.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.அன்பு அதிகமானால் பிரிந்துபோகும் நெஞ்சு.
//

மறுக்காச் சொல்லேய்

 
On 29 June 2009 at 06:26 , நாமக்கல் சிபி said...

//மறுக்காச் சொல்லேய்!//

இதெப்படி முடியுது?

 
On 30 June 2009 at 04:54 , ராஜா | KVR said...

//தொலைபேசிச் சிணுங்கள்களும்//

ரொம்ப போதையேத்துமோ?

 
On 7 March 2010 at 08:07 , Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

 
On 14 April 2010 at 19:03 , www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

 
On 14 April 2010 at 19:08 , www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

 
On 13 June 2010 at 13:18 , !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

மிகவும் நேர்த்தியாக எழுதி இருக்கிறீர்கள்; . பகிர்வுக்கு நன்றி

 

பதிப்புரிமை

© Copyrights Reserved to Namakkal Shibi, the author of this blog, the contents of this blog shall not be reproduced in any form of media without the knowledge or prior permission of the author.

© இவ்வலைப்பூவின் படைப்புகள் மற்றும் அவற்றின் பதிப்புரிமை யாவும் இவ்வலைப்பூவின் ஆசிரியர் நாமக்கல் சிபியை மட்டுமே சாரும்! ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவரும் இவ்வலைப்பூவின் பக்கங்களை/படைப்புகளை ஊடகத்தின் எவ்வித உருவிலும் மறுபதிப்பு செய்யலாகாது!